Skip to main content

Advertisement

ஐரோப்பா முழுதும் பகலை இருளாக்கிய பிரமிக்க வைக்கும் சூரிய கிரகணம் - கண்ணை கவரும் படங்கள்

சூரிய கிரகணம் 2026
BBC

பல தசாப்தங்களில் ஐரோப்பாவில் ஏற்பட்ட மிக முக்கியமான சூரிய கிரகணத்தை புதன்கிழமை கோடிக்கணக்கான மக்கள் கண்டுகளித்தனர். சில நொடிகள் மட்டுமே நீடித்த அந்தக் காட்சியில், சந்திரன் சூரியனை மறைத்ததால் சூரியன் மறைந்தது.

பிரிட்டனின் பெரும்பாலான பகுதிகளில் 90 சதவிகிதத்துக்கும் அதிகமான சூரியனை சந்திரன் மறைத்ததை மக்கள் கண்டனர்.

1999ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த சூரிய கிரகணம் மிகப்பெரிய அளவில் நடந்துள்ளது.

அதேநேரம், கிரீன்லாந்து, ஐஸ்லாந்து மற்றும் ஸ்பெயினின் சில பகுதிகளில் அரிதான முழு சூரிய கிரகணம் தெரிந்தது.

சூரிய கிரகணம் 2026
BBC
சூரிய கிரகணம் 2026
BBC

வெளிச்சம் குறையத் தொடங்கியதும், கண்டம் முழுவதும் மக்கள் கூட்டம் கூட்டமாக வானத்தை நோக்கிப் பார்த்து இந்தக் காட்சியைக் கண்டுகளித்தனர்.

சூரியனின் கடைசி கதிர்களும் மறைந்தபோது சிலர் உற்சாகமாகக் குரல் எழுப்பினர். மற்றவர்கள் அமைதியாக அந்தக் காட்சியைப் பார்த்தனர்.

 இந்த நிகழ்வை நூற்றுக்கணக்கான மக்கள் கண்டுகளித்தனர்.
BBC
ஜெர்மனியின் முனிச்சில் உள்ள ஒலிம்பிக் பூங்காவில் இந்த நிகழ்வை நூற்றுக்கணக்கான மக்கள் கண்டுகளித்தனர்.
பார்வையாளர்கள்.
BBC
பிரான்ஸின் தெற்குப் பகுதியில் உள்ள அபாடியா கோட்டை வானியல் ஆய்வகத்தில் பார்வையாளர்கள்.

சூரியனை சந்திரன் முழுமையாக மறைத்த பகுதிகளில் இருந்தவர்கள் இரண்டு நிமிடங்களுக்கும் குறைவான நேரம் இருளை அனுபவித்தனர். பின்னர் ஒளி மீண்டும் தோன்றத் தொடங்கியது.

சூரிய கிரகணத்தின் வெவ்வேறு நிலைகளைக் காட்டும் தொகுப்புப் படம்.
BBC
வடக்கு போர்ச்சுகலில் இருந்து காணப்பட்ட சூரிய கிரகணத்தின் வெவ்வேறு நிலைகளைக் காட்டும் படம்.

ரஷ்யாவின் சைபீரியாவின் முனைப்பகுதியில் முழு சூரிய கிரகணம் தொடங்கியது. முழு கிரகணப் பாதை ஐஸ்லாந்துக்கும் கிரீன்லாந்துக்கும் இடையே வளைந்து சென்று, பின்னர் அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்து வடக்கு ஸ்பெயினை நோக்கிச் சென்றது.

நிலப்பரப்பில் முழு சூரிய கிரகணத்தைக் காண முடிந்த கடைசி இடங்கள் மஜோர்கா மற்றும் மெனோர்கா தீவுகள் ஆகும். பின்னர் சூரியன் மறைந்தபோது, கிரகணத்தின் நிழல் மத்தியதரைக் கடலில் மறைந்தது.

 வானைக் கவனித்தவர்களை இருளில் ஆழ்த்திய காட்சி.
Reuters
ஸ்பெயின் அருகே உள்ள ஆர்கோஸ் டி லாஸ் சலினாஸ் பகுதியில் வானில் முழு சூரிய கிரகணம் ஏற்படுவதற்கு சில நொடிகளுக்கு முன்பு, வானைக் கவனித்தவர்களை இருளில் ஆழ்த்திய காட்சி.
சந்திரன் சூரியனைக் கடந்து செல்லத் தொடங்கியது.
EPA/Shutterstock
நெதர்லாந்தின் ஆஸ்டன் பகுதியில் இருந்து காணப்பட்ட பகுதி சூரிய கிரகணத்தின்போது, சந்திரன் சூரியனைக் கடந்து செல்லத் தொடங்கியது.
நிலப்பரப்பில் முழு சூரிய கிரகணத்தைக் காண முடிந்த கடைசி இடங்கள் மஜோர்கா மற்றும் மெனோர்கா தீவுகள் ஆகும். பின்னர் சூரியன் மறைந்தபோது, கிரகணத்தின் நிழல் மத்தியதரைக் கடலில் மறைந்தது.
EPA/Shutterstock
ஐரோப்பா முழுவதும் சூரிய கிரகணக் காட்சி நிறைவடையத் தொடங்கியபோது, சந்திரன் தனது பயணத்தைத் தொடர்ந்து மேற்கொண்டது.
 சூரியனின் மேற்பரப்பில் இருந்து வெளியே வளைந்து காணப்படும் இளஞ்சிவப்பு நிற வாயு வளையங்களையும் காண முடிந்தது.
Cesar Manso/AFP/Getty Images
ஸ்பெயினின் பெர்கோஸ் நகரில் முழு சூரிய கிரகணத்தின்போது, சூரியனின் வளிமண்டலத்தையும், சூரியனின் மேற்பரப்பில் இருந்து வெளியே வளைந்து காணப்படும் இளஞ்சிவப்பு நிற வாயு வளையங்களையும் காண முடிந்தது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

RAAGA Aaha Siranta Isai!