Skip to main content
டுரியான் துங்கால் காவல்துறை விசாரணை நிறைவு !

டுரியான் துங்கால் காவல்துறை விசாரணை நிறைவு !

 

மலாக்கா டுரியான் துங்கால் தூப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான காவல்துறை விசாரணை முடிவடைந்துள்ளது ! 

அதன் தொடர்பான சம்பந்தப்பட்ட தரப்புகளின் விசாரணை அறிக்கைக்காக மட்டுமே, காவல்துறை காத்திருப்பதாக, தேசிய காவல்படை தலைவர் தெரிவித்துள்ளார். 

கடந்தண்டு நவம்பரில், அங்கு மூவர் காவல்துறையரால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக, செய்திகள் வெளிவந்தன. 

--------- 

சிலாங்கூரின் எந்தவொரு மாவட்டத்திலும் பன்றி வளர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு, தாம் உடன்படப் போவதில்லை என, மாநில சுல்தான் தெரிவித்துள்ளார் ! 

பன்றிக் கழிவுகளால் ஏற்படும் துர்நாற்றம் மற்றும் ஆற்று நீர் ஆதாரங்கள் மாசுபடுவது போன்ற, சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு, அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார்.

பன்றி வளர்ப்பிற்குப் பதிலாக, வெளிநாடுகளில் இருந்து பன்றி இறைச்சியை இறக்குமதி செய்வதற்கான உரிமங்களை வழங்குவது குறித்து, அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என அவர் சொன்னார். 

---------- 

மூத்த ஆயுதப்படை அதிகாரிகளை உட்படுத்திய பதவி உயர்வு பட்டியல் கசிந்ததாகக் கூறப்படுவது குறித்து, விசாரணை நடைபெற்று வருவதை காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது ! 

அவ்விவகாரம் குறித்து, பலரிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவி செய்யப்பட்டன. 

--------- 

ஜொகூர் Skudai-யில் உள்ள வீட்டொன்றில், இன்று அதிகாலையில் ஏற்பட்ட தீச்சம்பவத்தில் சிக்கி உயிரிழந்த இருவரில் ஒருவர், மூன்று மாத கர்ப்பிணி பெண் என தெரிவிக்கப்பட்டுள்ளது ! 

--------- 

சிலாங்கூர் செராசில், விபத்து ஏற்படுத்தியதாகக் கூறப்படும் முதியவர் ஒருவரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த 52 வயது நபருக்கு, 5,500 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது !

--------- 

சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, KL Sentral - JB Sentral வழிதடத்தை உட்படுத்தி, 12-ஆயிரத்து 600 கூடுதல் ETS ரயில் சேவைகள் வழங்கப்படுகின்றன !  

RAAGA Aaha Siranta Isai!