
சீனப் பெருநாள் மற்றும் நோன்பு தொடக்க நாளை முன்னிட்டு, PLUS நெடுஞ்சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால், கிட்டத்தட்ட 300 RELA உறுப்பினர்கள் பணியமர்த்தப்படுகின்றனர் !
அக்காலகட்டத்தில், போக்குவரத்து சுமூகமாக இருப்பதை அவர்கள் உறுதிச் செய்வர்.
அந்த காலகட்டத்தில், PLUS நெடுஞ்சாலைகளில் ஒரு நாளைக்கு, 2 மில்லியனுக்கும் மேற்பட்ட வாகனங்கள் பயணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பயணங்களை திட்டமிட்டு மேற்கொள்ளும்படி, வாகனமோட்டிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
----------
நல்ல வருமானம் பெற்றும், PTPTN கடனை திருப்பிச் செலுத்தாத மாணவர்களுக்கு மட்டுமே, பயணத் தடை விதிக்கப்படும் !
அக்கடனை திருப்பிச் செலுத்தாத அனைத்து மாணவர்களுக்கும் அத்தடை விதிக்கப்படாது என உயர்கல்வி அமைச்சு தெளிவுப்படுத்தியுள்ளது.
புதிய பட்டதாரிகள், இன்னும் வேலை பெறாதவர்கள், அல்லது B40 மற்றும் M40 குழுவைச் சேர்ந்தவர்கள் மீது, இந்தத் தடை விதிக்கப்படமாட்டாது, என்றாரவர்.
----------
சட்டத்தை மீறி கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் மீது நடவடிக்கை எடுக்க, ஊராட்சி மன்றங்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதாக, பிரதமர் தெரிவித்துள்ளார் !
வேண்டுமென்றே விதிமுறைகளைப் பின்பற்றாத வழிபாட்டு தலங்களை அரசாங்கம் இனியும் பொறுத்துக் கொள்ளாது என டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
இந்நடவடிக்கை, சர்ச்சையை ஏற்படுத்தக்கூடும் என்பதை அவர் ஒப்புக்கொண்டாலும், சட்ட அமுலாக்கம் அரசாங்கத்தின் பொறுப்பு என சுட்டிக்காட்டினார்.
----------
இதனிடையே, பத்துமலை, சட்டத்திற்குட்பட்டு செயல்பட்டு வருவதாகவும், அங்கு பிரச்சனை எதுவும் இல்லை என்றும், டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார் !
மேலும், தேவையான நடைமுறைகள் பூர்த்தியான பின், அங்கு கூடிய விரைவில் மின்படிக்கட்டு கட்டுவதற்கான அனுமதி வழங்கப்படும் என அவர் சொன்னார்.
----------
மற்றொரு நிலவரத்தில், பன்றி வளர்ப்பை அரசாங்கம் ஒருபோதும் எதிர்த்ததில்லை என டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார் !
ஆனால், இத்தகைய கால்நடை வளர்ப்பு, பொது மக்களுக்கு கவலை ஏற்படுத்தக்கூடிய பகுதிகளில் நடைபெறக் கூடாது என அவர் வலியுறுத்தினார்.