Skip to main content
பேரணிக்குத் தடை !

பேரணிக்குத் தடை !

அனுமதியின்றி கட்டப்பட்டதாகக் கூறப்படும் ஆலயங்களுக்கு எதிரான பேரணிக்கு அனுமதி வழங்கப்படவில்லை ! 

தலைநகரில், இன்று மாலை  நடைப்பெறவிருந்த அப்பேரணியில் பொதுமக்கள் கலந்துகொள்ள வேண்டாம் என்றும் மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல் துறை எச்சரித்துள்ளது. 

பாதுகாப்பு உளவுத்துறை தகவல்களையும், அவ்விடத்தைச் சுற்றியுள்ள வளாக உரிமையாளர்கள் உட்பட சம்பந்தப்பட்ட தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் அது முடிவானதாக KL காவல் துறை தெரிவித்துள்ளது. 

பொது பாதுகாப்பும் நலனும் முக்கியம் காவல் துறை அறிவுறுத்தியது. 

-- 

பெருநாள் காலக்கட்டத்தில் நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கக்கூடும்! 

எனவே, சாலை பயனர்கள் சீரான பயணத்தை மேற்கொள்ள MyPLUS-TTA செயலியை பயன்படுத்தி முன்கூட்டியே தங்களின் பயணங்களைத் திட்டமிட்டு கொள்ளுமாறு PLUS அறிவுறுத்தியது. 

அக்காலக்கட்டத்தில், ஒரு நாளைக்கு 2 மில்லியன் வாகனங்கள் வரை சாலையில் பயணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

-- 

இதனிடையே, சீனப் புத்தாண்டு கொண்டாட்டாத்தை முன்னிட்டு டோல் கட்டணத்திற்கு 50 விழுக்காடு கழிவு வழங்கப்பட்டுள்ளது! 

அதனை பொதுப்பணித்துறை அமைச்சு அறிக்கை ஒன்றின் வழி அறிவித்துள்ளது. 

அச்சலுகை பிப்ரவரி 14 ஆம் தேதி நள்ளிரவு மணி 12:01-க்குத் தொடங்கி பிப்ரவரி 15 ஆம் தேதி இரவு மணி 11:59- க்கு முடிவடைகிறது. 

-- 

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சென்று வரவேற்பதை உறுதி செய்துள்ளார். 

இன்று தொடங்கி இரண்டு நாட்களுக்கு, மோடி அதிகாரப்பூர்வ பயணமாக மலேசியாவுக்கு வருகைப் புரிகிறார். 


அச்சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், முதலீடு மற்றும் இருதரப்பு உறவுகள் பற்றி கலந்தாலோசிக்கப்படும். 

அவர், இன்று மாலை மணி 4 அளவில் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தை வந்தடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

-- 

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு தாக்குதலில், 31 பேர் கொல்லப்பட்டனர்; சுமார்  170 பேர் காயமடைந்துள்ளனர். 

அச்சம்பவ குறித்து தடயவியல் துறை விசாரணை நடத்தி வருகிறது. 

-- 

இந்தோனேசியாவில் இன்று அதிகாலை 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

என்றாலும், அதனால் சுனாமி அச்சுறுத்தல் இல்லை என மெட்மலேசியா தெரிவித்துள்ளது. 

RAAGA Aaha Siranta Isai!