Skip to main content
அரிசி உற்பத்தி மறுபரிசீலனை

அரிசி உற்பத்தி மறுபரிசீலனை

உள்நாட்டு அரிசி உற்பத்தி அமைப்பை மறுபரிசீலனை செய்து, அதன் விலையை கட்டமைக்க ஆய்வு நடத்தி வருகிறது, விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சு ! 

அமெரிக்காவிலிருந்து மட்டுமல்லாது, பிற நாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்யப்படும் அரிசி விலை குறைந்திருப்பதே அதற்கு காரணம். 

அந்த ஆய்வு, விவசாயிகளின் நலனை பாதுகாக்கவும், B40 உள்ளிட்ட மக்களுக்கு, நியாயமான விலையில் அரிசி கிடைப்பதை உறுதி செய்யவும் நோக்கமாகக் கொண்டுள்ளது. 

--  

சீனப் புத்தாண்டை முன்னிட்டு, டோல் கட்டணத்திற்கு விலைக் குறைப்புச் சலுகை வழங்க, அமைச்சரவை ஒப்புக் கொண்டுள்ளது ! 

பெருநாள் காலங்களில், மக்களின் பயணச் செலவை குறைக்கும் நோக்கிலே, அது செயல்படுத்தப்படுவதாக அரசாங்கப் பேச்சாளர் Datuk Fahmi Fadzil தெரிவித்தார். 

என்றாலும் அது குறித்த இறுதி முடிவை பொதுப்பணித் துறை அமைச்சு விரைவில் அறிவிக்கும் என அவர் சொன்னார். 

-- 

ஜொகூர் Kota Tinggiயில் ஆறு மாணவர்களுக்கு காசநோய் ஏற்பட்டுள்ளது.

அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். 

சம்பந்தப்பட்ட மாணவர்களின் பள்ளிகளை மூட இதுவரை எந்த உத்தரவையும் மாநில கல்வித் துறை வெளியிடவில்லை. 

-- 

சிலாங்கூர், பாங்கியில், கடந்த வாரம் தனது பெண் தோழியான ஆரம்பப் பள்ளி ஆசிரியரைக் கொலை செய்ததாக நம்பப்படும், கால்நடை வியாபாரி ஒருவர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், குற்றம் சாட்டப்பட்டார்.

-- 

வியட்னாமில், சீன புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு், அந்நாட்டின் முக்கிய விமான நிலையங்களில் விமான சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. 

அக்காலக்கட்டத்தில், Ho Chi Minh மற்றும் ஹனோய் விமான நிலையங்களில் பயணிகள் எண்ணிக்கை பெரிதும் உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. 

RAAGA Aaha Siranta Isai!